தேசிய தொழில் வங்கியானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்த்தல், பொருத்தமான தொழிலுக்கமைய பயிற்சி மற்றும் பொருளாதார உளநல ஆலோசனைகளையும் வழங்குதல் போன்ற சேவைகளை மானிடசமுகமேம்பாட்டு நோக்கோடு ஆற்றிவரும் நிறுவனமாகும்.
தேசிய தொழில் வங்கிக் காரியாலயமானது சிறீலங்காவின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் கொழும்பு மாநகரத்தில் மூவினமக்களும் செறிந்துவாழும் பிரதேசத்தில் தலைமைக் காரியாலயத்தையும் விண்ணப்பதாரர்களின் நலனைக்கருத்தில் கொண்டு பிரதேசரீதியாக மனிதவளங்களின் வலைப்பின்னல் மூலமும் சேவையாற்றி வருகின்றது.
தேசிய தொழில் வங்கியானது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதிலும் தரவுகளை இரகசியம் பேணுவதிலும், நம்பகத்தன்மை வாய்ந்த, உறுதியான ஸ்தாபனமாகும்.
தேசிய தொழில் வங்கியானது முக்கிய சேவைகளை வழங்குகின்றன:
உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தரும் சேவைகள்.
அதியுயர் தொழிற்பயிற்சி கற்பிக்கும் சேவைகள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உளநல, சட்டரீதியான ஆலோசனைகள் வழங்கும் சேவைகள்.